கர்நாடக முதல்வர் சித்தராமையா கோவிலுக்குள் செல்ல மறுத்த சம்பவம் அரங்கேறி இருக்கும் நிலையில், அவர் ஒரு இந்து விரோதி என்று பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையா, இந்து விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வருவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
சித்தராமையா மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியினரும், இண்டி கூட்டணியில் இருக்கும் தி.மு.க. உள்ளிட்ட சில கட்சியினரும் இந்து விரோதப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர். அதேசமயம், தேர்தல் நேரங்களில் மட்டும் கோவில், குளம் என சென்றுவந்து இந்து ஆதரவாளர்கள் போல இந்துக்கள் மத்தியில் நடிப்பார்கள்.
இந்த நிலையில், முதல்வர் சித்தராமையா இந்து கோவிலுக்குள் செல்ல மறுத்த சம்பவம் கடும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. அதாவது, விஜயபுரா மாவட்டம் தாவேரியில் உள்ள ஒரு இந்து கோவில் விழாவில் பங்கேற்கச் சென்றார். அப்போது, கோவிலின் உள்ளே வருமாறு அங்கிருந்தவர்கள் சித்தராமையாவை அழைத்தனர்.
ஆனால், சித்தராமையாவோ கோவிலுக்குள் செல்ல மறுத்து விட்டார். மேலும், நான் வரவில்லை, நீங்கள் மட்டும் செல்லுங்கள் என்று செய்கையின் மூலம் தெரிவித்தார். பின்னர், சுவாமிக்கு தீபாராதனை காட்டிவிட்டு, வெளியில் இருந்த சித்தராமையாவுக்கு ஆரத்தி காட்டி, பூ மாலை அணிவிக்கப்பட்டது.
இந்த சூழிலல், சித்தராமையா கோவிலுக்குள் செல்ல மறுத்த இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட பா.ஜ.க.வினர் சித்தராமையா ஒரு இந்து விரோதி என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பா.ஜ.க.வினர் கூறுகையில், “இதுதான் முதல்வர் சித்தராமையாவின் உண்மையான முகம். சிறுபான்மையினருக்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கியவர், அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு ஒரு ரூபாய் கூட நிதி தரவில்லை. அவர் பகவான் ஸ்ரீராமரின் அவதாரம் என்று போற்றப்படுகிறார். அதனால்தான், அவர் விஜயபுராவின் தியாபேரி கிராமத்தில் உள்ள வாக்தேவி தேவியை தரிசனம் செய்ய மறுக்கிறார்.
முதல்வர் சித்தராமையா, நீங்கள் தர்காக்கள் மற்றும் மசூதிகளுக்குச் சென்று அவர்கள் கொடுக்கும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு போஸ் கொடுப்பீர்கள். அதேசமயம், தேசத்தின் நலனுக்காக தெய்வத்திற்கு மரியாதை காட்ட உங்களுக்கு நேரம் இல்லை. இந்து கடவுள்கள் மீதும், இந்து மக்கள் மீதும் உங்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு” என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
இதுகுறித்து தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் மேலிட பொறுப்பாளரான சி.டி.ரவி, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “கர்நாடக முதல்வர் சித்தராமையாவை, அவரது அமைச்சரும், பூசாரியும் கோவிலுக்குள் வந்து கடவுளை தரிசனம் செய்யக் கோரிய போதிலும் கோவிலுக்குள் நுழைய மறுக்கிறார்.
அதே சித்தராமையாவுக்கு, தர்காவில் மத ரீதியாக கும்பிடுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இராமர் கோவில் இயக்கத்தில் ஈடுபட்டுள்ள இந்து காரியகர்த்தாக்களை முதல்வர் சித்தராமையா கைதி செய்ததில் ஆச்சரியமில்லை. இந்துக்கள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு?” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
Karnataka chief minister @siddaramaiah refuses to enter a temple despite his minister and priest requesting to come inside and seek the darshan of the deity.
The same Siddaramaiah had no issues bowing down religiously in a Dargah.
No wonder CM Siddaramaiah is targeting Hindu… pic.twitter.com/1WgB6hwcA1
— C T Ravi 🇮🇳 ಸಿ ಟಿ ರವಿ (@CTRavi_BJP) January 3, 2024