ஈரானில் நேற்று நடைபெற்ற இரட்டை குண்டு வெடித்ததில் 103-க்கு மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.  ஈரானின் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானியை, 2020-ம் ஆண்டு அமெரிக்க ராணுவம் ட்ரோன் தாக்குதல் மூலம் படுகொலை செய்தது. நேற்று அவரது நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, நேற்றுஆயிரக்கணக்கான மக்கள் அவரதுநினைவிடத்தை நோக்கி ஊர்வலம்சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் இரண்டுமுறை குண்டுகள் வெடித்து இதில் 103-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், மேலும் 140-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில், இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் தளத்தில், "ஈரானின் கெர்மன் நகரில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து நாங்கள் அறிந்தபோது அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தோம். இந்த இக்கட்டான நேரத்தில், ஈரான் அரசுக்கும், மக்களுக்கும் எங்களது ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். எங்களின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடனும், காயமடைந்தவர்களுடனும் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.