கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியில் அரசு பேருந்தில் பயணம் செய்த மனநோயாளியை கொடூரமாக தாக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மணி கண்டன், மனநலம் பாதிக்கப்பட்ட இவர் சம்பவத்தன்று குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்த போது நடத்துனர் பயண சீட்டுக்கு பணம் கேட்டுள்ளார், அப்போது மணிகண்டன் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்தில் வைத்து மன நலம் பாதிக்கப்பட்ட மணி கண்டனை கொடூரமாக தாக்கினர். இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றனர்.