இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சின் முதல் பேட்டிங் முடிவில் தென் ஆப்பிரிக்கா 176 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
டி20 மற்றும் ஒரு தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் போட்டி நடைபெற்றது.
கேப்டவுனில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 55 விக்கெட்கள் இழப்பிற்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 55 ரன்களை எடுத்திருந்தார். இது தொடர்ந்து இந்தியாவின் பேட்டிங் நடைபெற்றது. இதில் 153 ரன்கள் வரை 4 விக்கெட்களை இழந்திருந்த இந்தியா அடுத்த 11 பந்துகளில் 6 விக்கெட்களை இழந்து 153 ரன்களை மட்டுமே எடுத்தது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஐடன் மார்க்ரம் ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடி ஆட்டமிழக்காமல் வந்தார்.
பின்னர் 8வது விக்கெட்டில் ஆட்டமிழந்த இவர் மொத்தமாக 17 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்களை எடுத்து 103 பந்துகளில் 106 ரன்களை எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா அணியின் மற்ற வீரர்கள் 11 ரன்களை கூட தாண்டாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வந்தனர். இன்றைய நாள் தென் ஆப்பிரிக்கா அணி 176 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்களை வீழ்த்தினார். முகேஷ் குமார் 2 விக்கெட்களை எடுத்தார். முகமது சிராஜ், பிரசித்தி கிருஷ்ணா தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.