லட்சத்தீவுகளில் இருந்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
லட்சத்தீவின் கவரட்டி நகரில் நேற்று (ஜனவரி-3) நடைபெற்ற வளர்ச்சித் திட்டங்களை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். லேப்டாப்கள், இருசக்கர வாகனங்கள், விவசாய கடன் அட்டை, ஆயுஷ்மான் அடையாள அட்டை ஆகியவற்றை அவர் பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும், ரூ.1,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மேலும் பல்வேறு தீவில் உள்ள பகுதிகளை அவர் பார்வையிட்டார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“சமீபத்தில், லட்சத்தீவு மக்களில் ஒருவராக இருக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அதன் மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிக்கிறேன்.
For those who wish to embrace the adventurer in them, Lakshadweep has to be on your list.
During my stay, I also tried snorkelling – what an exhilarating experience it was! pic.twitter.com/rikUTGlFN7
— Narendra Modi (@narendramodi) January 4, 2024
அகத்தி, பங்காரம், கவரட்டி பகுதி மக்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். லட்சத்தீவில் எடுத்த சில புகைபடங்களையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.