அயோத்தி மேம்பாட்டு ஆணையம், சர்வதேச காத்தாடி திருவிழாவை நடத்தவுள்ளது.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அயோத்தியில் சர்வதேச காத்தாடி திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடு செய்துள்ளதாக அயோத்தி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த திருவிழா ஜனவரி 19 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் உலகம் முழுவதிலும் உள்ள புகழ்பெற்ற பட்டம்விடும் வீரர்கள் கலந்துகொள்ள முடியும். மேலும் இந்த திருவிழா அவர்களின் பட்டம்விடும் கலையை வெளிப்படுத்தும் வாய்ப்பு வழங்குகிறது.
அயோத்தி மேம்பாட்டு ஆணையம், சர்வதேச காத்தாடி திருவிழாவை நடத்துவதற்கான தற்காலிக உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு நிறுவனத்தை நியமிப்பதற்கான முடிவுகளை எடுத்துள்ளது.
ஜனவரி 8 ஆம் தேதிக்குள் நிறுவனத்தை நியமிப்பதற்கான முடிவுகளையும், முழு தேர்வு செயல்முறையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து சர்வதேச காத்தாடி விழாவை நடத்துவதற்கான விரிவான திட்டம் வகுக்கப்படும்.