ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் காவல் துறை உயரதிகாரிகள் மாநாடு இன்று தொடங்குகிறது.
அனைத்து மாநில டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் பங்கேற்கும் காவல்துறை உயரதிகாரிகள் மாநாடு ஜெய்பூரில் இன்று தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், பிரதமர் மோடி நாளை பங்கேற்று உரையாற்றுகிறார்.
சைபர் கிரைம், காவல்துறையில் தொழில்நுட்பம், பயங்கரவாத எதிர்ப்பு சவால்கள், இடதுசாரி தீவிரவாதம், சிறைச்சாலை சீர்திருத்தங்கள், உள் நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துதல், AI, Deepfake போன்ற புதிய தொழில்நுட்பங்களால் ஏற்படும் சவால்கள் மற்றும் அவற்றைச் சமாளிப்பதற்கான வழிகள் காவல் மற்றும் பாதுகாப்பு எதிர்காலம் உள்ளிட்டமைவ குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.