நேபாளத்தில் இருந்து 10000 மெகவாட் மின்சாரம் ஒப்பந்தம்!
Mar 15, 2026, 05:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 நேபாளத்தில் இருந்து 10000 மெகவாட் மின்சாரம் ஒப்பந்தம்!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு 10000 மெகாவாட் மின்சாரம் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இரண்டு நாள் பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேபாளம் சென்றுள்ளார்.

தலைநகர் காத்மாண்டு சென்ற ஜெய்சங்கரை, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் என்.பி.சாத் விமான நிலையம் வந்து வரவேற்றார். இந்த பயணத்தின்போது இந்தியா – நேபாளம் கூட்டு ஆணையத்தின் 7-வது கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

இரு நாடுகளுக்கு இடையேயான அனைத்து இருதரப்பு உறவுகள் குறித்தும், ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டிய துறைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நேபாளத்தின் மறுசீரமைப்பு முயற்சிக்கு ரூ. 1,000 கோடி மானியமாக நேபாள-இந்தியா கூட்டுக் குழுவின் ஏழாவது கூட்டத்தின் போது, ​​வெளியுறவு அமைச்சர் மட்டத்தில் இந்தியா நேற்று அறிவித்ததுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதி ராம் சந்திர பௌடல் மற்றும் பிரசண்டா என்று அழைக்கப்படும் பிரதமர் புஷ்ப கமல் தஹால் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

நேபாளம் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவிற்கு வழங்க ஒப்பந்தம் கையெத்தானது.

அதேபோல், நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமியால் உருவாக்கப்பட்ட நானோ செயற்கைக்கோள் சேவை ஒப்பந்தத்தை இரு தரப்பும் தொடங்கியுள்ளன. நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமி மற்றும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம், நேபாள மின்சார ஆணையம் மற்றும் இந்தியாவின் என்டிபிசி லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கான ஒத்துழைப்புக்கானது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக காத்மாண்டு போஸ்ட் இதழுக்கு பேட்டி அளித்திருந்த என்.பி. சாத், “இந்தியா உடன் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு, 30-க்கும் மேற்பட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறோம். குறிப்பாக, போக்குவரத்து, பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், மின்சாரம், நீர் வளம், கலாச்சாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Jai sankarnepal
ShareTweetSendShare
Previous Post

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies