நீதிமன்ற நடவடிக்கைகளில் அதிகாரிகள் நேரில் ஆஜராவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வழங்கும் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புக்கு ஐசிஎஸ் & ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் இரண்டு மூத்த அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பிய உத்தரவுக்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததது.
இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. அப்போது,அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகும் விவகாரம் தொடர்பாக சில வழிகாட்டுதல்களை நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஐசிஏஎஸ் அதிகாரிகள் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தலைமை நீதிபதி டாக்டர். டி.ஒய். சந்திரசூட், நீதிபதி ஸ்ரீ ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் பெஞ்சின் தீர்ப்பு ஒருபுறம் புத்திசாலித்தனமாகவும் சமத்துவமாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் நீதித்துறை அமைப்பின் நேர்மை மற்றும் கம்பீரத்திற்கு ஒரு சான்றாகும், மேலும் ஒவ்வொரு குடிமகனும் அதில் தங்கியிருக்கும் நம்பிக்கையையும் வலுப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
அனைத்து நீதிமன்றங்களின் உத்தரவுகளையும், சட்டப்பூர்வ தீர்வுகள் மற்றும் அரசு நடைமுறைகளுக்குக் கீழ்ப்படிந்து விடாமுயற்சியுடன் மற்றும் விரைவுத்தன்மையுடன் செயல்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரட்டிப்பாக்குமாறு அனைத்து அதிகாரிகளையும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.