டெல்லியில் உள்ள மொஹல்லா கிளினிக்குகளில் நடந்த ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி அரசின் மீது பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி அரசு மருத்துவமனைகளில் போலி மருந்துகள் வழங்கப்பட்ட குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் ஒரு முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மொஹல்லா மருத்துவமனைகளில் இல்லாத நோயாளிகளுக்கு போலி ஆய்வக சோதனைகள் நடந்துள்ளது.
இந்நிலையில் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள மொஹல்லா கிளினிக்குகளில் நடந்த ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி அரசின் மீது பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி,
மொஹல்லா கிளினிக்குகள் நோயியல் பரிசோதனைக்கான வசதியை வழங்கியுள்ளன, மேலும் விஜிலென்ஸ் அறிக்கைகள் மற்றும் துறைசார் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், அந்த நோயியல் பரிசோதனைகளும் இப்போது ஆய்வின் கீழ் உள்ளன. தனியார் ஏஜென்சிகள் மூலம் போலி ஆய்வக சோதனைகள் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.