ஆனந்த் மஹிந்திரா, மிகப்பெரிய சாலை நெட்வொர்க்குகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலைப் பகிர்ந்துள்ளார். சீனாவை விட இந்தியா இரண்டாவது பெரியதாக உள்ளது. இந்தியா விரைவில் அமெரிக்காவை விஞ்சி மிகப்பெரிய சாலை நெட்வொர்க் கொண்ட நாடாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சாலை நெட்வொர்க்கில் (road network) இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த விஷயத்தில் சீனாவை நம் நாடு பின்னுக்கு தள்ளியுள்ளது என்பது சிறப்பு. ஆம், சீனாவை பின்னுக்குத்தள்ளி மிகப்பெரிய சாலை நெட்வொர்க் கொண்ட இரண்டாவது பெரிய நாடாக நம் நாடு மாறியுள்ளது.
அதேநேரம் இதில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் இது குறித்து ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பதிவில்,
I was happily surprised to see that we are ahead of China. That must be because the western half of China is sparsely inhabited.
More interesting is that we’re within striking distance of the U.S.A.
I’m sure @nitin_gadkari ji can set a goal to overtake the U.S not too long from… https://t.co/nxUgYDk0Gy— anand mahindra (@anandmahindra) January 4, 2024
மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு ஒரு செய்தியை அனுப்பினார், விரைவில் இந்தியா அமெரிக்காவை முந்தி மிகப்பெரிய சாலை நெட்வொர்க் கொண்ட நாடாக மாறும் என்று கூறினார்.
“இந்திய சீனாவை விட முன்னால் இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்பட்டேன். அதற்குக் காரணம் சீனாவின் மேற்குப் பகுதியில் மக்கள் வசிக்கும் பகுதி குறைவாகவே உள்ளது. இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், நாங்கள் அமெரிக்காவைத் தொடும் தூரத்தில் இருக்கிறோம். இன்றிலிருந்து அமெரிக்காவை முந்திச் செல்வதற்கான இலக்கை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியால் அமைக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்! எனத் தெரிவித்துள்ளார்.