மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் மாநிலத்தில் PM SHRI பள்ளிகளை தொடங்கி வைத்தனர்.
உத்தரபிரதேச லக்னோவில் நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் மாநிலத்தில் 928 பள்ளிகள் முதற்கட்டமாக PM SHRI பள்ளிகளை தொடங்கி வைத்தனர்.
இதில் உரையாற்றிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதற்காக பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி அதை அரசாங்கத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாக மாற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 928 அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்துதல் மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவை முதற்கட்டமாக PM SHRI திட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில் 81 கேந்திரிய மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் அடங்கும். கடந்த மூன்று ஆண்டுகளில் மாநிலத்தில் புதிய கல்விக் கொள்கை (NEP) 2020ன் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் உ.பி. முதல்வரின் முயற்சிகளையும் பாராட்டினார்.
NEP 2020, ஒரு தத்துவ ஆவணமாக, உலகை வழிநடத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
நிகழ்வில் உரையாற்றிய யோகி ஆதித்யநாத்,
மாநிலம் முழுவதும் உள்ள PM SHRI பள்ளிகளின் கீழ் தரம் உயர்த்துவதற்காக மொத்தம் 1753 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றார். பள்ளிகளில் பால் வாடிகா, ஸ்மார்ட் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், டிஜிட்டல் நூலகங்கள், விளையாட்டு வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும். இதன் விளைவாக முழுமையான பள்ளிக் கல்வியை வழங்குவதற்கான ஒருங்கிணைந்த வளாகங்கள் உருவாக்கப்படும் எனத் தெரித்துள்ளார்.