புதிய விதிமுறையின் கீழ் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றவர்களின் தரவுகளை மத்திய அரசு அனைத்து மாநில அரசிடமும் கேட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு வாடகை தாய் ஒழுங்குமுறை சட்டம் நடைமுறைக்கு வந்தது. பின்னர் வாடகை தாயை அமர்த்தும் தம்பதியர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருருந்தது.
அதன்படி கர்ப்பப்பை அகற்றப்பட்டு இருத்தல், கர்ப்பப்பை புற்றுநோய் அல்லது வேறு விதமான நோய் பாதிப்புகள், கருத்தரிப்பதால் உயிருக்கு ஆபத்து விளைக்க கூடிய நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்கள் உள்ளவர்கள் மட்டுமே வாடகை தாய் உதவியுடன் குழந்தை பெற முடியும் என்றும் வாடகை தாயாக நியமிக்கும் பெண்ணின் கர்ப்பப்பையில் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே கருமுட்டைகளை செலுத்த வேண்டும் என்றும் விதிமுறைகள் இருந்தது.
இந்நிலையில் தற்போது இந்த புதிய விதிமுறைகளை பயன்படுத்தி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றவர்களின் தரவுகளை மத்திய அரசு அனைத்து மாநில அரசிடம் கேட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ” நாடு முழுவதும் உள்ள பல ( இன் விற்ற கருத்தரித்தல் ) IVF கிளினிக்குகள் அரசின் விதிகளுக்கு இணங்குவதில் குறைபாடுகள் இருப்பதாக அறிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், ” 2021வாடகை தாய் ஒழுங்குமுறை சட்டம் மற்றும் உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டம், ஆகியவை பல மில்லியன் டாலர் இனப்பெருக்க மருத்துவத் துறையை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டன.
ஆனால் பல வணிக ரீதியான செயல்களும் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சட்டம், புதிய விதிமுறைளை பயன்படுத்து வரும் கிளினிக்குகளுக்கான செயல்பாட்டுத் தரங்களையும், வணிக வாடகைத் தாய் முறையைத் தடைசெய்யவும், விதிமீறல்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ₹ 10 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் பரிந்துரைக்கிறது ” என்று கூறினார்.