ரேஷன் முறைகேடு வழக்கில் தொடர்புடையதாக போங்கான் நகராட்சி முன்னாள் தலைவர் சங்கர் ஆதியாவை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது.
ரேசன் முறைகேடு வழக்கு தொடர்பாக பாங்கானில் உள்ள முன்னாள் நகராட்சி தலைவர் சங்கர் ஆதியா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷேக் ஷாஜஹான் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்த சென்றனர். அப்போது அங்கு திரண்ட ஏராளமானோர் அமலாத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
மேலும் அவர்களின் வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டன. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உள்துறை செயலர் மற்றம் டிஜிபிக்கு மேற்கு வந்த ஆளுநர் ஆளுநர் ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் காயம் அடைந்து கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், போங்கான் நகராட்சி முன்னாள் தலைவர் சங்கர் ஆதியாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.