8 ஆண்டுகளாக சிறையில் இருந்த தென் ஆப்பிரிக்காவின் தடகள வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியசுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் பிரபல தடகள வீரர் தான் பிஸ்டோரியஸ். 37 வயதாகும் இவர் 2013 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று தனது வீட்டில் காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை சுட்டுக் கொலை செய்தார்.
இதனால் இவருக்கு 13 ஆண்டுகள், 5 மாதம்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. 2014ஆம் அக்டோபரில் சிறை சென்ற இவர் 2015 அக்டோபரில் வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டார்.
2016, ஜூலை முதல் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். இங்கு ‘டிராக்டர்’ ஓட்டினார், நுாலகத்தில் பணிபுரிந்தார், சக கைதிகள் அறைகளை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டார்.
இதனிடையே, தென் ஆப்ரிக்க சட்டப்படி தண்டனையில் பாதி நாள் சிறையில் இருந்தால் போதும், பின் பரோலில் வெளியே வரலாம். இதன் படி, 8 ஆண்டுக்கு மேல் சிறையில் இருந்த பிஸ்டோரியசிற்கு பரோல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் அவர் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர் இவர் பிரிட்டோரியாவின் புறநகர் பகுதியில் உள்ள தனது மாமா வீட்டுக்கு சென்றார்.
202 ஆம் ஆண்டு தான் இவருக்கு தண்டனை காலம் முடிவடையும் காலம். அதுவரை இவர் அங்கேயே தங்கவுள்ளார். மேலும் அவருக்கு தண்டனை காலம் முடியும் வரை மீடியாவை சந்திக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது உட்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.