போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டாமா? - அண்ணாமலை கேள்வி
Mar 15, 2026, 11:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டாமா? – அண்ணாமலை கேள்வி

Murugesan M by Murugesan M
Jan 6, 2024, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 6,000 பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக அரசு தொழிலாளர்கள் குறைகளைத் தீர்ப்பதில் காட்டும் சுணக்கம்!

தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்கள், வரும் ஜனவரி 9, 2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. போக்குவரத்துத் துறையில் நிரப்பப்படாமல் இருக்கும் 35,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும். நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துக் கழகங்களை மீட்டெடுக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, இந்த வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

போக்குவரத்துத் துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், ஏற்கனவே தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 6,000 பேருந்துகள் இயக்கப்படாமல் இருக்கின்றன என்றும், சென்னையில் மட்டும் சுமார் 600 முதல் 800 பேருந்துகள் தினமும் குறைவாக இயக்கப்படுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.

குறைவான பேருந்துகள் இயக்கத்தால், போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள், அதிகப்படியான பணிச்சுமைக்கு ஆளாவதோடு, போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால், பொதுமக்களும் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்கள் பெரிதும் அரசுப் பேருந்துகளை நம்பி இருக்கும் சூழலில், தொழிலாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு, பொதுமக்களை மேலும் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாக்கும். ஆனால், திமுக அரசுக்கு தொழிலாளர்கள் பற்றியும் கவலை இல்லை, பொதுமக்கள் பற்றியும் அக்கறை இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஒவ்வொரு துறையிலும் தங்கள் கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. பண்டிகைக் காலங்களில் போக்குவரத்துத் துறை தொழிலாளர்களிடம் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ்.சிவசங்கர், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என்று அவர்கள் வயிற்றில் அடித்திருக்கிறார்.

பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமல், அதனைத் தள்ளிப் போட மட்டுமே முயற்சி செய்கிறார் அமைச்சர். போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டாமா?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதுமே, அடுத்த இரண்டு வாரங்களும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அரசுப் போக்குவரத்தை நம்பியிருக்கும் இந்த சூழலில், திமுக அரசின் திறமையின்மையால் பண்டிகைக் காலத்தில் பொதுமக்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவதை சற்றும் அனுமதிக்க முடியாது. தொழிலாளர் நலன்களைப் புறக்கணிக்கும் அமைச்சரின் இந்த முடிவு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

போலி நிறுவனங்கள் மூலம், போக்குவரத்துத் துறையில் விசித்திரமான முறைகளில் ஊழல் செய்வதில் முனைப்புடன் இருக்கும் அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துறையின் தொழிலாளர்கள் குறைகளைத் தீர்ப்பதில் காட்டும் சுணக்கம் உண்மையில் இது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையா அல்லது பண்டிகைக் காலங்களில், தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் பேருந்துக் கட்டணத்தை மிக அதிகமாக உயர்த்தி பலன்பெறுவதற்காக அமைச்சர் செய்யும் கூட்டுச்சதியா என்ற கேள்வியையே எழுப்பியிருக்கிறது.

வரும் ஜனவரி 8 ஆம் தேதி அன்று, திமுக அரசு, மீண்டும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை அறிவித்துள்ளதாகத் தெரிகிறது. காலம் தாழ்த்தி பிரச்சினையைத் தள்ளிப் போடும் யுக்தியாக இல்லாமல், பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள் குறைகளைக் களைய, அமைச்சரும் திமுக அரசும் முன்வர வேண்டும் என்றும், பொங்கல் பண்டிகை காலத்தில் போக்குவரத்து வசதி இன்றி பொதுமக்கள் அவதிப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு : தமிழக வீரர்கள் 50 பேர் பங்கேற்பு! 

Next Post

புரோ கபடி : தபாங் டெல்லி திரில் வெற்றி!

Related News

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies