அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து, ஒரு இலட்சம் லட்டுகள் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
இந்நிலையில், அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து ஒரு இலட்சம் லட்டுகள் அயோத்தி இரமார் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஏ.வி தர்மா ரெட்டி கூறியதாவது, வரும் ஜனவரி 22-ஆம் தேதி இராமர் கோவிலின் பிரம்மாண்ட திறப்பு விழாவிற்காக நாடே ஆவலுடன் காத்திருக்கிறது. கடவுள் வெங்கடேஸ்வரரும், இராமரும் ஸ்ரீமகா விஷ்ணுவின் அவதாரங்கள். விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கும், வி.வி.ஐ.பி.,க்களுக்கும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில், தலா 25 கிராம் எடைக்கொண்ட ஒரு லட்சம் லட்டுகள் அனுப்பப்படும் என்று கூறினார்.