இந்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்த உலகக்கோப்பையில் 20 அணிகள் பங்குபெறவுள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடர் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி ஜுன் 29ம் தேதி வரையில் நடைபெறவுள்ளன. மேலும் இப்போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் உள்ள மற்ற நான்கு அணிகளும் ஒருமுறை விளையாடும். அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
அதில் ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று குழுவில் உள்ள ஏதேனும் மூன்று அணிகளுடன் விளையாடும். அதன் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன் முடிவில் ஜுன் 29ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும்.
பிரிவுகள் :
ஏ பிரிவு: இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா
பி பிரிவு: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்
சி பிரிவு: நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூ கினியா
டி பிரிவு: தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாளம்.
📢 Announced!
Take a look at #TeamIndia's group stage fixtures for the upcoming ICC Men's T20 World Cup 2024 👌👌
India will play all their group matches in the USA 🇺🇸#T20WorldCup pic.twitter.com/zv1xrqr0VZ
— BCCI (@BCCI) January 5, 2024
சூப்பர் சுற்றில் இந்தியா விளையாடும் போட்டிகள் :
ஜூன் 5 – இந்தியா vs அயர்லாந்து.
ஜூன் 9 – இந்தியா vs பாகிஸ்தான்.
ஜூன் 12 – இந்தியா vs அமெரிக்கா.
ஜூன் 15 – இந்தியா vs கனடா.
சூப்பர் 8 சுற்று அட்டவணை :
ஜூன் 19 – A2 vs D1
ஜூன் 19 – BI vs C2
ஜூன் 20 – C1 vs A1
ஜூன் 20 – B2 vs D2
ஜூன் 21 – B1 vs D1
ஜூன் 21 – A2 vs C2
ஜூன் 22 – A1 vs D2
ஜூன் 22 – C1 vs B2
ஜூன் 23 – A2 vs B1
ஜூன் 23 – C2 vs D1
ஜூன் 24 – B2 vs A1
ஜூன்24 – C1 vs D2
அரையிறுதி & இறுதிப்போட்டி அட்டவணை :
ஜுன் 26 – முதல் அரையிறுதி
ஜுன் 27 – இரண்டாவது அரையிறுதி
ஜுன் 29 – இறுதிப்போட்டி.