மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதில் முழு நம்பிக்கை உள்ளது!
Mar 15, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதில் முழு நம்பிக்கை உள்ளது!

காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 6, 2024, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதில் முழு நம்பிக்கை உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் விவிபிஏடி குறித்து விவாதிக்க இண்டி கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க நேரம் கேட்டு தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியிருந்தார். அதில், வாக்கு எண்ணிக்கையின் போது விவிபாட் இயந்திரத்தின் ஒப்புகை சீட்டுகள் 2 சதவீதம் மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. 100 சதவீத ஒப்புகை சீட்டுகளும் சரிபார்க்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதற்கு தலைமைத் தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் பிரமோத் குமார் சர்மா தரப்பில் அனுப்பிய  கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளின் மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு ஏற்கெனவே பதில் அளிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் ‘அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பகுதியில் அனைத்து சந்தேகங்களுக்கும் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதே விவகாரம் தொடர்பாக கடந்த டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த கடிதத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரம் தொடர்பாக புதிதாக எந்த புகாரும் கூறப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் தேர்தல் ஆணைய இணையத்தில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது என்பதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த பகுதி கடந்த 4-ம் தேதி புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் அனைத்து சந்தேகங்களுக்கும் விரிவான பதில் உள்ளது.

வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நாட்களில் மின்னணு  வாக்குப்பதிவு  இயந்திரங்களை கையாளும்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருக்கின்றனர். இதுவரை பல தேர்தல்களில் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த அனுபவத்தின் அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்ந கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags: Election commissionevmindia allianceJairam RameshVVPAT
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் ஆரஞ்ச் அலர்ட்!

Next Post

இதயத்தில் உணர்ச்சிகளை நிரப்பும் சவஸ்தியின் பாடல்! – பிரதமர் மோடி

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies