இந்திய விண்வெளி நிறுவனதின் ஆதித்யா எல் 1 செயற்கைகோள் இன்று மாலை 4 மணிக்கு சூரியனின் எல் 1 புள்ளியை சென்றடைகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.
இந்நிலையில் ஆதித்யா எல்1 இன்று மாலை எல் 1 புள்ளியை சென்றடைகிறது. இன்று மாலை 4 மணிக்கு எல் 1 புள்ளியின் சுற்றுவட்டப்பாதைக்குள் ஆதித்யா எல் 1 விண்கலம் செலுத்தப்பட உள்ளது.
இந்திய விண்வெளி நிறுவனம், எல்1 புள்ளியில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த முயற்சிப்பது இதுவே முதல் முறையாகும். அந்த புள்ளிக்கு சென்றால் மட்டுமே ஆதித்யா சூரியனை தடையின்றி பார்க்க முடியும்.