ஆதித்யா எல்1 அதன் எல்-1 புள்ளியில் நிலை நிறுத்தப்பட்டதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் எனும் எல்-1 புள்ளியில், பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை சமமாக இருக்கும்.
அந்தப் புள்ளியில் ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ” இந்தியா மற்றோரு அடையாளத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் முதல் சூரிய ஆய்வான ஆதித்யா எல் 1 அதன் இலக்கை அடைந்துள்ளது. நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது மற்றொரு சான்றாகும்.
இந்த அசாதாரண சாதனையை நம் நாட்டு மக்களுடன் இணைந்து நானும் பாராட்டுகிறேன். மனிதர்களின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளைத் தொடர்ந்து தொடர்வோம் ” என்று தெரிவித்துள்ளார்.
India creates yet another landmark. India’s first solar observatory Aditya-L1 reaches it destination. It is a testament to the relentless dedication of our scientists in realising among the most complex and intricate space missions. I join the nation in applauding this…
— Narendra Modi (@narendramodi) January 6, 2024