கடந்த ஆண்டில் சுமார் 350 என்சிசி வீரர்கள் கடற்படையில் அக்னிவீரர்களாக சேர்ந்துள்ளனர் என இந்திய கடற்படை தலைமை அட்மிரல் ஆர் ஹரி குமார் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் நடைபெற்ற என்சிசி குடியரசு தின முகாம் 2024-ல் இந்திய கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசியவர்,
கடந்த ஆண்டில் சுமார் 350 என்சிசி கேடட்கள் அக்னிவீரர்களாக கடற்படையில் சேர்ந்துள்ளனர். இன்று ஏராளமான பெண் கேடட்களும் அக்னிவீரர்களாக கடற்படையில் இணைகின்றனர் என்றார்.
பல தசாப்தங்களாக NCC இளைஞர்களின் முழுமையான வளர்ச்சிக்கான ஒரு அளவுகோலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது மற்றும் தலைமுறைகளை பொறுப்புள்ள மற்றும் ஊக்கமளிக்கும் குடிமக்களாக வளர்த்துள்ளது என்றார்.
ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் என்ற முழக்கத்தால் வழிநடத்தப்படும் தேசத்தை கட்டியெழுப்புவதில் என்சிசி தீவிரமாக பங்காற்றி வருகிறது எனத் தெரிவித்தார்.