ராமேஸ்வரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் தேர்! 
Oct 28, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமேஸ்வரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் தேர்! 

Murugesan M by Murugesan M
Jan 6, 2024, 06:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரையில் மியான்மர் நாட்டு மீனவர்களின் கடல் தேர் கரை ஒதுங்கியது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம்  இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் ஓலைக்குடா கலங்கரை விளக்கம் அருகே விசித்திர தேர் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.இதனையடுத்து அப்பகுதி மீனவர்கள் கடலின் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது அது மரம் மற்றும் மூங்கிலால் செய்யப்பட்ட தேர் என்பதும் அதில்  சிலை மற்றும் பூஜை பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது.மேலும் கொடி ஒன்றும் அதில் நடப்பட்டிருந்தது.

இது மியான்மர் நாட்டில் இருந்து வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த  தேரில்  மியான்மர் நாட்டின் பர்மீஸ் மொழியில் சில வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. ‘கடல் வளம், மீன்வளம் பெருக வேண்டி மியான்மர் மீனவர்கள் பூஜை செய்து கடலில் விட்டிருக்கலாம் எனவும், காற்றின் வேகத்தில் அது ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதேபோல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தங்கச்சிமடம் அந்தோணியார் புரம் கடற்கரையில் 20 அடி உயர புத்தர் கோயில் போன்ற வடிவமைப்பில் கடல் தேர் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags: Olaikuda lighthouseBurmese languageRamaswaram beachsea chariot of Myanmar fishermenRameswaram Ramanathaswamy Temple
Share
Tweet
SendShare
Previous Post

கேப்டன் மில்லர் படத்தின் ட்ரைலர் வெளியானது!

Next Post

சுமார் 350 என்சிசி வீரர்கள் கடற்படையில் அக்னிவீரர்களாக சேர்ந்துள்ளனர்! – இந்திய கடற்படை தலைமை

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies