ஆஸ்திரேலியா அணி டேவிட் வார்னர் சர்வதேசப் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் நேற்று முடிந்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதேபோல் தனது கடைசி போட்டியில் அரைசதம் அடித்து வெற்றியுடன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெற்றார். இதற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது சமூக வலைதளப்பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், ஒரு அதிரடியான டி20 பேட்டராக இருந்து ஒரு நெகிழ்ச்சியான டெஸ்ட் வீரராக மாறியுள்ளீர்கள், டேவிட் வார்னர். உங்களது பயணம் தகவமைப்பு மற்றும் மன உறுதி ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.
கிரிக்கெட்டில் அவரது மாற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இன்னிங்சை வேகப்படுத்துவதில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். அற்புதமான டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துகள், டேவிட்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.
டேவிட் வார்னர் கிரிக்கெட் மட்டுமின்றி தனது நடிப்பு திறமை மூலமாக இந்திய ரசிகர்களின் அதுவும் குறிப்பாக தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
From being an explosive T20 batter to becoming a resilient Test player, @davidwarner31's journey exemplifies adaptability and grit.
His transition and evolution in the game has been remarkable, showcasing aggressive intent while mastering the art of pacing an innings.… pic.twitter.com/wSLpbMZkT0
— Sachin Tendulkar (@sachin_rt) January 6, 2024