பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை இங்கிலாந்து செல்கிறார்.
3 நாள் பயணமாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை இங்கிலாந்து செல்கிறார்.22 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இங்கிலாந்து செல்வது இதுவே முறை என்பதால் பாதுகாப்பு அமைச்சரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு ராஜ்நாத் சிங் இங்கிலாந்து பயணம் மேற்கொள்வதாக இருந்த நிலையில் சில காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது.
முந்தைய பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், 2002ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி கடைசியாக லண்டன் சென்றார். லண்டனில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கரின் நினைவிடங்களுக்குச் செல்லும் ராஜ்நாத்சிங், அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இந்தியாவும் இங்கிலாந்தும் இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், GBP 36 பில்லியன் இருதரப்பு கூட்டாண்மையை கணிசமாக மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) நோக்கி பயணிப்பது குறிப்பிடத்தக்கது.