5 வயது குழந்தைக்கு விழித்திருக்கும் கிரானியோட்டமி மூலம் அறுவை சிகிச்சை செய்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் மூளை செயல்பாட்டை சோதனை செய்ய பிரதமரின் புகைப்படம் காண்பிக்கபட்டது. அந்த புகைப்படத்தை குழந்தை எளிதில் அடையாளம் கண்டார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 5 வயது குழந்தைக்கு விழிப்பு நிலையில் மூளை அறுவை சிகிச்சை செய்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை, மிகவும் சிறிய குழந்தைக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை என்ற சாதனையை படைத்துள்ளது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மருத்துவத்துறை சாதனையில், ஐந்து வயது சிறுமிக்கு, இடது பெரிசில்வியன் இன்ட்ராஆக்சியல் மூளைக் கட்டியை அகற்றுவதற்காக கான்சியஸ் செடேஷன் நுட்பத்தைப் (Conscious Sedation technique) பயன்படுத்தி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ’விழித்திருக்கும் கிரானியோட்டமி’(awake craniotomy) அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த மூளைக்கட்டி அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட சிறுமி, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், ’ விழித்திருக்கும் கிரானியோட்டமி’ அறுவை சிகிச்சையின்போது, நம்ப முடியாத அளவு ஒத்துழைப்புக் கொடுத்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சையின் வெற்றிக்கு டெல்லி எய்ம்ஸில் உள்ள நியூரோஅனெஸ்தீசியா மற்றும் நியூரோராடியாலஜி குழுக்களின் சிறந்த ஒத்துழைப்பே காரணம் என்று அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர்.
மருத்துவத் துறையின் ஒருங்கிணைந்த முயற்சிகள் உயர்தர செயல்பாட்டு MRI மூளை ஆய்வுகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்தது, விழித்திருக்கும் கிரானியோட்டமி சிகிச்சையின்போது துல்லியத்தன்மை மிகவும் அவசியமானது.
செயல்பாட்டு MRI மூளை ஆய்வுகள் (functional MRI brain studies) அறுவை சிகிச்சை செயல்பாட்டில் முக்கிய பங்கு வகித்தன. இந்த அறுவை சிகிச்சை உலக அளவில் மிகவும் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
கார்டிகல் பகுதிகள் தொடர்பான முக்கியமான பதிவுகளை இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச மருத்துவ நிபுணர்கள் பாராட்டுகின்றனர். சேதத்தைத் தடுக்கவும், மூளையின் அத்தியாவசிய செயல்பாடுகளைப் பாதுகாக்கவும் கட்டி அகற்றும் போது இந்தப் பகுதிகளைப் பாதுகாப்பது மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
விழித்திருக்கும் கிரானியோட்டமி, ஒரு அதிநவீன நரம்பியல் அறுவை சிகிச்சை நுட்பம் ஆகும், நோயாளி சுயநினைவுடன் இருக்கும் போது மூளைக் கட்டிகளை அகற்றும் சிகிச்சை இது. அறுவை சிகிச்சையின்போது, நிகழ்நேர கார்டிகல் மேப்பிங்கை செயல்படுத்துவதன் மூலம் முக்கிய மூளை செயல்பாடுகளுக்கு ஏற்படக்கூடிய சேதத்தைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மூளையின் இயக்கங்கள், பேச்சு அல்லது பார்வையைக் கட்டுப்படுத்தும் பகுதிகளுக்கு அருகில், வலிப்புத்தாக்கத்தை ஏற்படுத்தும் மூளையின் கட்டி அல்லது பகுதி இருந்தால், அறுவை சிகிச்சையின் போது நோயாளி விழித்திருக்க வேண்டும்.
அறுவை சிகிச்சை செய்யும் அறுவை சிகிச்சை நிபுணர் கேள்விகளைக் கேட்டு, அதற்கு நோயாளி பதிலளிக்கும்போது மூளையின் செயல்பாடு கவனிக்கப்படும், அது பதிவு செய்யப்படும். அந்த அந்த குழந்தையிடம் பழக்கமான பொருள்களை பற்றி கேட்கப்பட்டது. பின்னர் பாரத பிரதமரின் புகைப்படம் காண்பிக்கப்பட்டது.
அப்போது அந்த குழந்தை எளிதல் பிரதமரை அடையாளம் கண்டார். மேலும் அந்த குழந்தை தனது சிகிச்சைக்கு பின்பு பேசுகையில், ” இரண்டு வாரத்தில் நான் பள்ளிக்குச் செல்வேன். அதுவரை ஓய்வில் இருக்கும்படி டாக்டர் அங்கிள் அறிவுறுத்தியிருக்கிறார்” என்றும் தனுக்கு சிகிச்சையின்போது எந்த பயமும் இல்லை என்றும் மார்ச் 22 ஆம் தேதி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.