இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட் இரண்டாம் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
அதில் இரண்டாவது டி20 போட்டி இன்று மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்துவருகிறது.
இந்திய அணியின் வீராங்கனைகள் :
ஸ்மிருதி மந்தனா, ஷாபாலி வர்மா , ரிச்சா கோஷ், ஹர்மன்ப்ரீத் கவுர் , ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், மன்னத் காஷ்யப், பூஜா வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பட்டேல் , ரேணுகா சிங்.
ஆஸ்திரேலியா அணியின் வீராங்கனைகள் :
அலிசா ஹீலி, ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி, தஹ்லியா மெக்ராத், ஆஷ்லீ கார்ட்னர், அனாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம், அலனா கிங், கிம் கார்த், டார்சி பிரவுன்.