வங்கதேச தேர்தலில் வெற்றி ஷேக் ஹசீனா, 5-து முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இதன் மூலம் உலகின் மிக நீண்ட காலம் பதவி வகித்த பெண் பிரதமர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
தேர்தல் புறக்கணிப்பு குறைந்த வாக்குப்பதிவுக்கு மத்தியில்,நடைபெற்ற வங்கதேச பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது. 299 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில்,அக்கட்சி 222 தொகுதிகளை கைப்பற்றியது. சுயேட்சைகள் 63 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
இதனையடுத்து ஐந்தாவது முறையாக ஷேக் ஹசீனா பிரதமராக பதவியேற்கிறார். இதன் மூலம் உலகின் மிக நீண்ட பெண் பிரதமராக பதவி வகித்த தலைவர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.
பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் நாட்டின் பொதுத் தேர்தலில் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. தேர்தலை நியாயமான முறையில் நடத்த ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என்றும், அதன் தலைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்திய எதிர்கட்சிகள், போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
இதனையடுத்து பங்களாதேஷ் தேசியவாத கட்சி தலைவர் கலீதா ஜியா (வயது 78) வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன.