ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பிடித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது.
இப்போட்டியானது வரும் 11ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி 11 ஆம் தேதி மொகாலியிலும், 2வது போட்டி வரும் 14 ஆம் தேதி இந்தூரிலும், 3வது போட்டி வரும் 17ஆம் தேதி பெங்களூருவிலும் நடைபெறவுள்ளது.
🚨 NEWS 🚨#TeamIndia’s squad for @IDFCFIRSTBank T20I series against Afghanistan announced 🔽
Rohit Sharma (C), S Gill, Y Jaiswal, Virat Kohli, Tilak Varma, Rinku Singh, Jitesh Sharma (wk), Sanju Samson (wk), Shivam Dube, W Sundar, Axar Patel, Ravi Bishnoi, Kuldeep Yadav,…
— BCCI (@BCCI) January 7, 2024
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ரோகித் மற்றும் கோலிக்கு இடம் கிடைக்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ரோகித் மற்றும் கோலி இருவரும் 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச டி20 போட்டியில் இடம் பிடித்துள்ளனர். இந்த அணிக்கு ரோகித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி :
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்.