இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட் இரண்டாம் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
அதில் இரண்டாவது டி20 போட்டி நேற்று மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணிக்கு ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்களாக விழுந்தது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷாபாலி வர்மா 1 ரன்னில் ஆட்டமிழக்க அவரது தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா 3 பௌண்டரீஸ் அடுத்து 13 ரங்களில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்ம்ரிதி மந்தனா 8வது ஓவரில் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இப்படி இந்திய அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தப்போது ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா கூட்டணி நிதானமாக விளையாடி 50 ரன்களை எடுத்தனர்.
இதில் ரிச்சா கோஷ் 23 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, தீப்தி ஷர்மா 5 பௌண்டரீஸ் உட்பட 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்தது.
ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஜார்ஜியா வேர்ஹாம், அன்னாபெல், கிம் கார்த் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதை தொடர்ந்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய அலிசா ஹீலி 4 பௌண்டரீஸ் உட்பட 26 ரன்களும், பெத் மூனி 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய தஹ்லியா மெக்ராத் 19 ரன்களும், ஆஷ்லீ கார்ட்னர் 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 18 ரன்களும், எல்லிஸ் பெர்ரி 34 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனால் ஆஸ்திரேலியா மகளிர் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.
இந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 விக்கெட்களும், பூஜா வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பட்டேல் தலா 1 விக்கெட்களும் எடுத்தனர். இப்போட்டியில் ஆட்டநாயகி விருது ஆஸ்திரேலியா அணியின் கிம் கார்துக்கு வழங்கப்பட்டது.