திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sep 12, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Jan 8, 2024, 11:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றி விட்டேன் என்று கூறும் முதலமைச்சர், பென்னாகரம் தொகுதிக்குக் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை சேலம் மேற்கு, பென்னாகரம் தொகுதியில், நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, 

பல நூற்றாண்டுகளாக சிறப்பாக விவசாயம் நடைபெற்றதற்கான சான்றாக, ஏர் கலப்பை பொறிக்கப்பட்ட நடுகல் கிடைத்தது பென்னாகரத்தின் தொன்மையை எடுத்துக்காட்டுகிறது.

விவசாயத்துக்குப் பெயர்போன பென்னாகரம் பகுதியில் சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் பயிரிடப்படுகின்றன. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், ஐநா சபை மூலம் 2023 ஆம் ஆண்டை, உலக சிறுதானிய ஆண்டாக அறிவித்து, உலக அளவில் சிறுதானியங்களின் பெருமையை எடுத்துச் சென்றுள்ளார். இதனால் சிறு தானியங்களின் விற்பனை 30% அதிகரித்துள்ளது.

மேலும், டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டில், உலகத் தலைவர்கள் அனைவரையும் சிறுதானிய உணவுகளைக் கொண்டு உபசரித்தார். வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததும், நாடு முழுவதும் நதி நீர் இணைப்பு செயல்படுத்தப்பட்டு, தர்மபுரியில் 40,000 ஏக்கர் பரப்பளவில் சிறுதானிய விவசாயம் நடைபெறும்.

மேலும், தர்மபுரி பாராளுமன்றத் தொகுதியில், பாஜக பாராளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தால், இன்று தமிழகத்தில் கடைசி வரிசையில் இருக்கும் தர்மபுரி மாவட்டம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், முதலிடங்களில் வரும் என்று தமிழக பாஜக உறுதி பூண்டுள்ளது.

வ.உ.சிதம்பரம் பிள்ளை மற்றும் பாரதியாரின் உற்ற தோழனாக விளங்கி, தன் பேச்சுக்கள் மூலம் சுதந்திரப்பற்றை இளைஞர்களுக்கு ஊட்டி, அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைந்து தேச விடுதலைக்காகப் போராடிய தியாகி சுப்பிரமணிய சிவா, தனது இறுதி நாட்களை இந்த பகுதியில் தான் செலவிட்டார்.
பென்னாகரம் பாப்பாரபட்டியில் பாரதமாதா கோவில் அமைக்க வேண்டும் என்பது இவரின் லட்சியம். பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்ரமணிய சிவா அவர்களின் நினைவு மண்டபமும், பாரத மாதா கோவிலையும் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின அமுத பெருவிழாவின் போது பூட்டி வைத்தது தேசவிரோத திமுக அரசு. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, பெரிய அளவிலான பாரதமாதா கோவில் மற்றும் சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபம் அமைக்கப்படும்.
தமிழகத்தில் அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி இருக்கிறது என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பென்னாகரம் அருகே உள்ள அலக்கட்டுமலை, கோட்டூர்மலை, ஏரிமலை போன்ற கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை. கழுதைகளைக் கொண்டுதான் அத்தியாவசிய பொருட்கள் மலை ஏற்றப்படுகின்றன. நமது பிரதமர், கிராம சாலை திட்டத்திற்கு கொடுத்த நிதி என்ன ஆனது என்று தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் கூறுவாரா.
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றி விட்டேன் என்று கூறும் முதலமைச்சர், பென்னாகரம் தொகுதிக்குக் கொடுத்த வாக்குறுதிகளான ஓகேனக்கல் நீர் மின் உற்பத்தித் திட்டம், அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட்டு தரம் உயர்த்தல், பாப்பாரப்பட்டியில் அரசு கூட்டுறவு சங்கங்கள், பெண்ணாகரத்தில் குளிர்பதனக் கிடங்குகள், ஓகேனக்கல் காவிரி ஆற்றில் உபரி நீரைத் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பி விவசாயப் பாசன வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் என ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக கூட்டணியை, தமிழக மக்கள் தூக்கியெறிய வேண்டும். தமிழகத்தையும் நாட்டையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி
 மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்க, தமிழகமும் துணை நிற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
Tags: bjp k annamalaiannamalai en mann en makkal rally
Share
Tweet
SendShare
Previous Post

பேருந்து கட்டணமா? விமான கட்டணமா? ஆம்னி பேருந்துகள் அடாவடி!

Next Post

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் டி20 : ஆஸ்திரேலியா வெற்றி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies