பழங்குடி மக்களுக்கு வீடு கட்ட நிலம் வாங்கித் தந்த தம்பதியினருக்கு, உரிய கௌரவத்தை அளித்திருக்கும் மத்திய அரசுக்கு, தமிழக மக்கள் சார்பில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
பொள்ளாச்சி ஆனைமலைத் தொடரில் வசிக்கும் மலைவாழ் பழங்குடி மக்களுக்காக, அறவழியில் போராட்டம் நடத்தி, 23 குடும்பத்தினருக்கு வீடுகள் கட்ட நிலம் வாங்கித் தந்த, சகோதரி ராஜலட்சுமி மற்றும் சகோதரர் ஜெயபால் தம்பதியினருக்கு மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரி ராஜலட்சுமி… pic.twitter.com/QFDE8QX1f8
— K.Annamalai (@annamalai_k) January 7, 2024
பொள்ளாச்சி ஆனைமலைத் தொடரில் வசிக்கும் மலைவாழ் பழங்குடி மக்களுக்காக, அறவழியில் போராட்டம் நடத்தி, 23 குடும்பத்தினருக்கு வீடுகள் கட்ட நிலம் வாங்கித் தந்த, சகோதரி ராஜலட்சுமி மற்றும் சகோதரர் ஜெயபால் தம்பதியினருக்கு மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரி ராஜலட்சுமி – ஜெயபால் தம்பதியினர், வரும் ஜனவரி 26 அன்று டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்கவிருக்கும் செய்தி, மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது.
அவர்களுக்கு உரிய கௌரவத்தை அளித்திருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு, தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.