உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான கோல்டன் குளோப் விருது ஆஸ்கருக்கு நிகராக கருதப்படுகிறது. இந்த விருது விழா ஆண்டுதோறும் நடைபெறும். உலகளவில் இருந்து சிறந்த படங்கள், இசை என பல்வேறு பிரிவுகளில் கோல்டன் குளோப் விருது வழங்கப்படும்.
81-வது கோல்டன் குளோப் விருது அமெரிக்காவில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர். நடிகரும் நகைச்சுவை கலைஞருமான ஜோ கோய் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதில் சிறந்த இயக்குனருக்கான பட்டியலில் ஓப்பன் ஹெய்மர் படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன், பார்பி படத்தின் இயக்குனர் கிரேட்டா கெர்விக் உள்பட சிலர் இடம் பெற்று இருந்தனர்.
இதில் கிறிஸ்டோபர் நோலன் அவர்களுக்கு சிறந்த இயக்குனருக்கான கோல்டன் குளோப் விருது கிடைத்தது. இதுவே அவர் வென்ற முதல் கோல்டன் குளோப் விருதாகும்.
அதேபோல் ஓப்பன் ஹெய்மர் படத்தில் நாயகனாக நடித்த சிலியன் முர்பிக்கும் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது கிடைத்தது. மேலும் இப்படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார்.
கோல்டன் குளோப் விருது வெற்றியாளர்கள் முழு பட்டியல் :
1. சிறந்த திரைப்படம் (டிராமா) – ஒப்பன்ஹெய்மர்.
2. சிறந்த இயக்குநர் – கிறிஸ்டோபர் நோலன் (ஒப்பன்ஹெய்மர்)
3. சிறந்த நடிகை (டிராமா) – லிலி கிளாட்ஸ்டோன் (கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்)
4. சிறந்த நடிகர் (டிராமா) – சிலியன் மர்ஃபி (ஒப்பன்ஹெய்மர்)
5. சிறந்த திரைப்படம் (மியூசிக்கல்/ காமெடி) – புவர் திங்ஸ்
6. சிறந்த திரைக்கதை – அனாடமி ஆஃப் எ ஃபால்
7. சிறந்த நடிகை (மியூசிக்கல்/ காமெடி) – எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)
8. சிறந்த நடிகர் (மியூசிக்கல்/ காமெடி) – பால் ஜியாமெட்டி (தி ஹோல்டோவர்ஸ்)
9. சிறந்த துணை நடிகர் – ராபர்ட் டவுனி ஜூனியர் (ஒப்பன்ஹெய்மர்)
10.சிறந்த துணை நடிகை – டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)
11.சிறந்த டிவி தொடர் (டிராமா) – சக்ஸசன்
12.சிறந்த டிவி தொடர் (மியூசிக்கல்/ காமெடி) – தி பியர்
13.சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் (இசை) – லுட்விக் யோரன்ஸோன் ஒப்பன்ஹெய்மர்
14.சிறந்த படம் (ஆங்கிலம் அல்லாத மொழி) – அனாடமி ஆஃப் எ ஃபால்
15.சிறந்த பாடல் – ’வாட் வாஸ் ஐ மேட் ஃபார்?’ (பார்பி – பில்லீ எலீஷ்)
16.சிறந்த அனிமேஷன் படம் – ’தி பாய் அண்ட் தி ஹெரோன்
17.சிறந்த வசூல் சாதனை படம் – பார்பி