மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: ஜனவரி 13-ல் பீகாரில் தொடங்கும் பிரதமர் மோடி!
Sep 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: ஜனவரி 13-ல் பீகாரில் தொடங்கும் பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 8, 2024, 01:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13-ம் தேதி பீகாரில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

நாடாளுமன்ற மக்களவைக்கான பொதுத்தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலைவிட கூடுதலாக 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது.

இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் டெல்லியிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து 150-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், தேர்தல் வியூகம் குறித்து நிர்வாகிகளின் கருத்துகளும் கேட்டறியப்பட்டன. அப்போது, தேர்தல் பிரச்சாரத்தை விரைவில் தொடங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.

மேலும், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், திடீரென நிதீஷ் குமார் கூட்டணியை முறித்துக் கொண்டார். ஆகவே, நிதீஷ் குமாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2024 மக்களவைத் தேர்தலில் பீகாரிலுள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பீகாரில் பல்வேறு பேரணிகளில் உரையாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பிரச்சாரக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு, ஜனவரி 15-ம் தேதிக்குப் பின்னர் முக்கிய பேரணிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதன்படி, மாநிலத்தில் பெகுசராய், பெட்டியா, ஒளரங்காபாத் ஆகிய இடங்களில் பிரதமர் மோடி 3 பேரணிகளில் உரையாற்றுகிறார்.

அதேபோல, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீதாமர்ஹி, மாதேபுரா மற்றும் நாளந்தா ஆகிய இடங்களில் அமித்ஷா உரையாற்றுவார். ஜெ.பி.நட்டா சீமாஞ்சல் மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பேரணிகளை நடத்தவிருக்கிறார்.

அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13-ம் தேதி பீகாரின் சம்பாரனில் இருந்து தனது மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதன்படி, ராமன் மைதானத்தில் நடைபெறும் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

மேலும், இப்பயணத்தின்போது, ​​பிரதமர் மோடி பீகார் முழுவதும் சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பா.ஜ.க.வின் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் முன்னெடுத்துச் செல்வதால் , கட்சியின் மாநில அமைப்பு தலைவர் சாம்ராட் சவுத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

Tags: PM ModiBiharelection compaignJanuary 13th
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்ரீ ராமரின் பக்திப் பாடலை பகிர்ந்த பிரதமர் மோடி!

Next Post

கோல்டன் குளோப் விருது : வெற்றியாளர்கள் பட்டியல்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies