இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 2 ஆக உள்ளது.
இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுக்க தொடங்கியது. இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாட்டில் புதிதாக 605 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 2 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்தனர். நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 3 3 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து 648 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 4 கோடியே 44 இலட்சத்து 80 ஆயிரத்து 341 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.