அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு லக்னோவில் ஜனவரி 22ஆம் தேதி இறைச்சிக்கடைகள் மூடப்படும் என அகில இந்திய ஜமியதுல் குரேஷ் அமைப்பு அறிவித்துள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில் வரும் 22ஆம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், திரை பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் உள்ளிட்டோருக்கு நேரடியாக அழைப்பிதழ் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கும்பாபிஷேகம் நடைபெறும் 22ஆம் தேதி லக்னோ நகரில் இறைச்சி கடைகள் மூடப்படும் என இந்திய ஜமியதுல் குரேஷ் அமைப்பு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தேசிய செயலாளர் ஷஹாபுதீன் குரேஷி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, நல்லெண்ணத்தின் அடிப்படையில் இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில்,லக்னோவின் பிலோச்புரா, சதர் கான்ட், ஃபதேகஞ்ச் மற்றும் லாடூச் சாலைகளில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூட பாஸ்மாண்டா முஸ்லிம் சமூகம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.