சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், திமுகவைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12 -ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து 2 முறை ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த 2 ஜாமீன் மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதனால், ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அங்கும் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
உடல் நிலையை கருத்தில் கொண்டு, ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும், இது தொடர்பாக, கீழமை நீதிமன்றத்தை நாடவேண்டும் அறிவுறுத்தியது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி 3-வது முறையாக, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கூடாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக, கருத்து தெரிவித்த சட்ட நிபுணர்கள் பலரும், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுபோன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பலரும் இன்றும் திகார் ஜெயிலில் களி திண்று கொண்டுள்ளனர். அப்படி இருக்க, செந்தில் பாலாஜிக்கு மட்டும் எப்படி ஜாமீன் கிடைக்கும்.
ஒரு வேளை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், மற்றவர்களும் இதே ரூட்டில் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் வரிசைகட்டுவார்கள். இதனால், அமலாக்கத்துறை விசாரணை பாதிக்கும்.
எனவே, ஜாமீனுக்கு வாய்ப்பை இல்லை. செந்தில் பாலாஜி திகார் ஜெயிலுக்கு செல்வது உறுதி என சத்தியம் செய்கின்றனர்.