அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் தங்களது நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9, 2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
குறிப்பாக, ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையைத் துவக்க வேண்டும், ஓய்வு பெற்றோருக்கு 90 மாதங்களாக வழங்காத பஞ்சப்படி உயர்வை வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்டவை பிரதான கோரிக்கைகள்.
தங்களது நீண்ட நாள் கோரிக்கைை தமிழக அரசிடம் வலியுத்தி ஆர்பாட்டம், உண்ணாவிரதம், தொடர் போராட்டம் என போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
எப்போது எல்லாம் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டுகிறதோ அப்போது எல்லாம், சத்தமின்றி, பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வைத்துவிடும் திமுக அரசு.
அவ்வப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்து, வெள்ளைக்கொடி பறக்கும் நேரத்தில் மீண்டும் யூடர்ன் அடிக்கும். இதனால், ஆவேசம் அடையும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள், இனி பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என காம்பண்ட் சுவரை எட்டிக்குதித்து வெளியே வருவார்கள்.
இப்படித்தான், புலி வரும் கதையாக, தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளித்துவிட்டு, எஸ்கேப் ஆகும் தமிழக அரசை கண்டித்து, வரும் 9 -ம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் வரும் 9 -ம் தேதி தவறாமல் பணிக்கு வர வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இப்பிரச்சனையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்கங்களுடன் கடந்த 5 -ம் தேதி அன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மீண்டும் 7 -ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்த, ஆனால் நடைபெறவில்லை. மாறாக 8-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என அமைச்சர் சிவசங்கர் தள்ளிப்போட்டார்.
இந்த நிலையில், இன்று ஆவலுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு சென்ற தொழிற்சங்க நிர்வாகிகள், பெரும் ஏமாற்றம் அடைந்தனர். காரணம், அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை படுதோல்வி அடைந்தது.
இதனால், திட்டமிட்டபடி ஜன.9-ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெரும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் பேருந்து இயங்காத நிலை உருவாகியுள்ளது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் எல்லாம் பீதியில் உள்ளனர். ஜனவரி 9-ம் தேதி முதல் திமுகவால் தமிழக மக்களுக்கு மேலும் தொல்லைகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு, ஆட்சியில் இல்லாவிட்டால் ஒரு பேச்சு என நேரத்திற்கு தகுந்த மாதிரி திமுகவும், அதன் தலைவர்களும் செயல்பட்டு வருகின்றனர். இதை நாங்கள் சும்மாவிடப்போவதில்லை. இனி எங்கள் ஆட்டத்தை பாருங்கள் என மீசையை முறுக்கின்றனர் தொழிலாளர்கள்.