இந்தியத் துப்பாக்கி சுடும் வீரரான வருண் தோமர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
பாரீஸில் வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி சுற்றான இதில் 26 நாடுகளைச் சேர்ந்த 385 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ஏர்பிஸ்டல் பந்தயத்தின் இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் வருண் தோமர், அர்ஜூன் சிங் சீமா ஆகியோர் பங்குபெற்றனர்.
இதில் வருண் தோமர் 239.6 புள்ளிகளைப் பெற்றுத் தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் சிங் சீமா 237.3 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மங்கோலியாவின் டேவாக்ஹூ எங்டிவான் 217.2 புள்ளிகளைப் பெற்று வெண்கலப்பதக்கம் வென்றனர். முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான வருண் தோமர் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.