ராமர் கோவில் கும்பாபிஷேக நாளில் பிரசவம்! 
Sep 12, 2026, 10:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர் கோவில் கும்பாபிஷேக நாளில் பிரசவம்! 

மருத்துவர்களிடம் கர்ப்பிணிப் பெண்கள் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Jan 9, 2024, 12:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் பிரசவம் பார்க்குமாறு ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு குழந்தை பிறக்கும் நேரமும் தருணமும் சிறப்பு வாய்ந்தது. குழந்தையின் வாழ்க்கையின் நிலையும், திசையும் அவர் பிறந்த நேரத்திலிருந்து கணிக்கப்படுகிறது. குழந்தையின் எதிர்காலம் பிறந்த நேரத்தின் மூலம் நிச்சயிக்கப்படுகிறது என்று கூட கூறலாம்.

எனவே நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என பெற்றோர் விரும்புகின்றனர். அதன் ஒரு பகுதியாக குறிப்பிட்ட நாளில் பிரசவம் வைத்துக்கொள்பவர்களும் உண்டு.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் பிரசவம் பார்க்குமாறு ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கான்பூரில் உள்ள கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவக் கல்லூரியின் கீழ் உள்ள தாய் சேய் மருத்துவமனை மருத்துவர்களிடம் பல கர்ப்பிணிப் பெண்கள் ஜனவரி 22 ஆம் தேதி சிசேரியன் மூலம் பிரசவம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அரசு மட்டுமின்றி பல தனியார் மருத்துவமனைகளுக்கும் இது போன்ற கோரிக்கைகள் வந்துள்ளன.

ஜனவரி 22ஆம் தேதி 35 சிசேரியன் அறுவை சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகள்  செய்யப்பட்டு வருவதாக ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரி மருத்துவர் சீமா திவேதி தெரிவித்துள்ளார்.  ராமர் கோவில் கும்பாபிஷேக நாளில் பிறந்தால், ராமருக்கு இருக்கும் அதே குணங்கள் தங்கள் குழந்தைக்கு இருக்கும் என தாய்மார்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்து ஜோதிடத்தின்படி, ஜனவரி 22ஆம் தேதி சிறப்பு  வாய்ந்த நாளாக  பார்க்கப்படுகிறது.  காலை 11:51 மணி முதல்  12:33 வரை நல்ல நேரமாக  கருதப்படுகிறது. இந்த நேரத்தில்  சிவபெருமான் திரிபுரசுரன் என்ற அரக்கனை வதம்  செய்ததால் நல்ல நேரம் என நம்பப்படுகிறது. இந்து புராணங்களின்படி, இந்த காலம் ஒருவரது வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றல்களை நீக்கும் என கூறப்படுகிறது.

Tags: uttar pradeshRam MandirPregnant womenrequest delivery on consecration daykanpur hospitalsGanesh Shankar Vidyarthi Memorial Medical College
Share
Tweet
SendShare
Previous Post

திமுகவுக்கு கடலில் பேனா சிலை வைக்க காசு இருக்கு மேட்டூர் அணையில் தூர்வார காசு இல்லை! – அண்ணாமலை கேள்வி

Next Post

இந்தியத் துப்பாக்கிச்சுடு வீரர் தங்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies