திமுகவுக்கு கடலில் பேனா சிலை வைக்க காசு இருக்கு மேட்டூர் அணையில் தூர்வார காசு இல்லை! - அண்ணாமலை கேள்வி
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவுக்கு கடலில் பேனா சிலை வைக்க காசு இருக்கு மேட்டூர் அணையில் தூர்வார காசு இல்லை! – அண்ணாமலை கேள்வி

Murugesan M by Murugesan M
Jan 9, 2024, 12:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

என்ன தகுதி இருக்கு, தன்னை டெல்டா காரன் என்று கூறிகொள்கிறார் முதல்வர் ஸ்டாலின் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில், நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, 

புகழ்பெற்ற மேட்டூர் அணை மூலம் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பல எதிர்ப்புகளைக் கடந்து, 1934ஆம் ஆண்டு கட்டப்பட்ட மேட்டூர் அணைதான் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் கொடுக்கிறது.

தமிழகம் பசுமையாகவும் செழுமையாகவும் இருக்க முக்கிய காரணம் மேட்டூர் அணை. கடந்த 2022 ஆம் ஆண்டு, மேட்டூர் அணையில் தண்ணீர் தேக்கி வைக்க போதிய கொள்ளளவு இல்லாமல் சுமார் 500 TMC தண்ணீர், (சுமார் 14 லட்ச கோடி லிட்டர்) கடலில் வீணாக கலந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழக அரசின் நீர்வளத்துறை தமிழக அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையில், மேட்டூர் அணையை தூர்வாரினால், கூடுதலாக 30 டிஎம்சி தண்ணீர் அணையில் தேக்கி வைக்க முடியும் என்றும், அதற்கு 3,000 கோடி ரூபாய் செலவாகும் என்றும் கூறியிருந்தனர்.

கடலில் கலக்கும் நீரை, மேட்டூர் அணையில் சேமித்து வைத்தால், விவசாயிகளுக்குப் பலன் கிடைக்கும் என்பதற்காகத் தான் இந்த தூர்வாரும் திட்டம். ஆனால் அரசிடம் நிதி இல்லை என்று கூறி இந்த திட்டத்தை நிராகாரித்துவிட்டது திமுக அரசு.

கடலில் பேனா சிலை வைக்க, சென்னையில் கார் பந்தயம் நடத்த, மத்திய அரசின் திட்டத்திற்கு புதிதாக தமிழ் பெயர் வைத்து, அதற்கு ஒரு விழா எடுத்து வீண் விளம்பரம் செய்ய, குடும்பத்துடன் துபாய் இன்பச் சுற்றுலா செல்ல, முதலமைச்சரின் தந்தை கலைஞர் கருணாநிதி பெயர் வைப்பதற்காகவே கட்டாயமாக ஒரு கட்டிடம் எழுப்ப என வீண் செலவுகள் அனைத்துக்கும் திமுக அரசிடம் பணம் இருக்கிறது.

மேட்டூர் அணையை தூர் வார அரசிடம் பணம் இல்லை. இந்த லட்சணத்தில் தன்னை டெல்டா காரன் என்று கூறிகொள்கிறார் முதல்வர்.

மேட்டூரில் தோனி மடுவு திட்டத்தின் கீழ் ஒரே ஒரு தடுப்பணை கட்டினால், மேட்டூர் தொகுதி உட்பட்ட கொளத்தூர் மற்றும் அந்தியூர் பகுதிகளில் மேலும் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால் பல ஆண்டுகளாக இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

மேட்டூரில் பாலிடெக்னிக் கல்லூரி, மேட்டூர் அணையில் தற்காலிகமாகவும், பகுதி நேரமாகவும் தொகுப்பூதியத்திலும் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களின் பணி நிரந்தரம், மேச்சேரியில் குளிர்பதனக் கிடங்கு, மேச்சேரியில் தக்காளி பழத் தொழிற்சாலை, தருமபுரி நகராட்சி பேருந்து நிலையம் தற்போது உள்ள இடத்திலேயே விரிவுபடுத்தப்பட்டு நவீனமயமாக்கல் என திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

ஆனால், 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகப் பொய் சொல்கிறார் முதலமைச்சர். மேட்டூர் சட்டமன்றத் தொகுதி உள்ளடக்கிய மேச்சேரி வழியாக தொப்பூர் -மேட்டூர் -பவானி -ஈரோடு வரை 94 கிலோமீட்டர் நிலத்திற்கான தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு, நமது மத்திய அரசு 118 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.

63,828 பேருக்கு பிரதமரின் வீடு, 4,49,970 வீடுகளில் குழாயில் குடிநீர், 3,01,532 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,78,408 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் 1,20,539 பேருக்கு, 1,90,151 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், சேலம் மாவட்டத்திற்கு 6682 கோடி ரூபாய் முத்ரா கடன் என மத்திய அரசு நலத்திட்டங்கள் லட்சக்கணக்கான பொதுமக்களைச் சென்றடைந்துள்ளது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஒவ்வொரு தொகுதியிலும், மோடி என்ற அற்புதமான தலைவர் போட்டியிடுகிறார் என்பதைக் கருத்தில் கொண்டு, மக்கள் நலனை முன்னிறுத்தி, நல்லாட்சியின் இலக்கணமாக விளங்கும் பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaiannamalai en mann en makkaldmk fails
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தியில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை!

Next Post

ராமர் கோவில் கும்பாபிஷேக நாளில் பிரசவம்! 

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies