ராமர் குறித்து சுமார் 20-25 ஆண்டுகளுக்கு தான் பாடிய பாடலை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளது ஆச்சரியமாகவும். மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாக பிரபல பாடகர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அயோத்தி ராமர் குறித்து பிரபல பாடகர்கள் பாடிய பக்தி பாடல்களை பிரதமர் மோடி எக்ஸ் வலைதளப்பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
தற்போது பிரபல பாடகர் ஹரிஹரன் பாடிய சப்னே தும்ஹே புகாரா ஸ்ரீ ராம் ஜி என்ற பாடலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, இது அனைவரையும் பக்தியில் ஆழ்த்தப்போவதாக தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பாராட்டு மகிழ்ச்சி அளிப்பதாக ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இது ஒரு பழைய பாடல், சுமார் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு பாடிய பாடல். இந்தப் பாடலைப் பற்றி பிரதமர் மோடி பகிர்ந்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. தற்போது நாட்டு மக்கள் அனைவரும் இந்த பாடலை கேட்கின்றனர்.
ஜனவரி 22 ஆம் தேதி அயோத்திக்கு நான் எனது நண்பருடன் செல்கிறேன். நான் பிரதமர் மோடியை சந்தித்து அவரது சில விழாக்களில் பாடல்கள் பாடியிருக்கிறேன். ஆனால் அவர் எனது பாடலை விவரித்த விதம் என்னை நெகிழ வைத்துள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.