சூரிய பொங்கல் என்பது தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. உலகிற்கே வழிகாட்டும் சூரியன் வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கும் நாள் இது. இதனை உத்தராயணம் என்றும் அழைப்பது உண்டு. மகத்தான விளைச்சலைக் கொடுத்த சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூரிய பொங்கல் கொண்டாடப்படுகிறது.
வரும் நாட்களில் செழிப்பை பொழிவதற்காக சூரியனின் அருளை பெறுவதற்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. இயற்கையின் விளைபொருட்களை இதயப்பூர்வமான மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் மீண்டும் இயற்கைக்கு வழங்குவதே சூரிய பொங்கல்.
புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசி பானையில் இருக்கும். பானையைச் சுற்றி மஞ்சள் மரக்கன்று கட்டப்பட்டிருக்கும்.
சம்பிரதாயத்தின்படி, பானையில் உள்ள பால் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுவதால் கொதிக்கிறது. அப்போது,வீட்டில் உள்ளவர்கள் ‘பொங்கலோ பொங்கல்’ என்று முழக்கமிடுவார்கள்.
ஒவ்வொருவரும், தங்கள் வீடு, அலுவலகங்களை அலங்கரித்து, புதிய ஆடைகளை அணிந்து, சூரியனை வணங்கி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாகவும் விருந்துண்டும் பொங்கல் திருநாளைக் கழிக்கின்றனர்.
இந்த உணவு முதலில் சூரியபகவானுக்கு புதிய வாழை இலையில் மற்ற உணவுகளுடன் சமர்ப்பிக்கப்படுகிறது. பின்னர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் உணவை பகிர்ந்து கொள்கிறோம். எந்தவொரு புதிய முயற்சிகளிலும் ஈடுபடுவதற்கு இந்த நாள் மிகவும் சாதகமாக கருதப்படுகிறது.
சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் வசந்த காலத்தின் வருகையை முன்னறிவிக்கிறது. புதிய நம்பிக்கையையும் புதிய வாய்ப்புகளையும் வழங்குகிறது.
சூரியனுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வைக்கும் வழக்கம் கிராமங்களுக்கு மட்டுமல்லாமல் நகரங்களிலும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.