ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நடிகர் மகேஷ் பாபு நடித்த ‘குண்டூர் காரம் படத்தின் புரமோஷன் நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி காவலர் ஒருவர் காயமடைந்தார்.
திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு, ஸ்ரீலீலா முக்கிய வேடங்களில் நடித்துள்ள குண்டூர் காரம் திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஹசின் மற்றும் ஹரிகா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி குண்டூரில் நடைபெற்றது. இதில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றிருந்தனர். அப்போது பின் வரிசையில் இருந்த ரசிகர்கள் தடுப்புகளை தாண்டி முன்வரிசைக்கு செல்ல முயன்றனர்.
அவர்களை போலீஸ் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கையில் கிடைத்த சேர்களை வீசியெறிந்து ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து தடியடி நடத்தி போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்தினர். இதில் பழைய குண்டூர் காவல் நிலை சப் இன்ஸ்பெக்டர் வெங்கட ராவ் என்ற காவலருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.