ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் பிரான்ஸ் வீரர் ஜெப்ரி பிளாங்கனேக்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வருகின்ற 14ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இதுவே இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியாகும்.
இந்த தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவு நடைபெற்றது. இதில் இந்திய வீரர் சுமித் நாகல் பங்குபெற்றார்.
இப்போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல் உடன் பிரான்ஸ் வீரர் ஜெப்ரி பிளாங்கனேக்ஸ் விளையாடினார். இதில் ஆரம்பம் முதல் அபாரமாக விளையாடி வந்த இந்திய வீரர் சுமித் நாகல் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
பிரான்ஸ் வீரர் ஜெப்ரி பிளாங்கனேக்ஸை வீழ்த்தியதன் மூலம் இந்திய வீரர் சுமித் நாகல் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.