அ.தி.மு.க.வுடன் கூட்டணி தேவையா? கருத்துக் கேட்கும் பா.ஜ.க.!
Jul 29, 2026, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அ.தி.மு.க.வுடன் கூட்டணி தேவையா? கருத்துக் கேட்கும் பா.ஜ.க.!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 10, 2024, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கும் நிலையில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி தேவையா என்று தமிழக பா.ஜ.க.வினரிடம் அக்கட்சித் தலைமை கருத்துக் கேட்டிருக்கிறது.

தமிழகத்தில் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணியில் இருந்து வந்த நிலையில், கடந்த ஓராண்டாகவே இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் நிலவி வந்தது. இது கடந்த 6 மாதங்களாக உச்சத்தை அடைந்த நிலையில், பா.ஜ.க.வுடன் இனி கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அ.தி.மு.க.வின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக, பா.ஜ.க. தனித்துப் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில்தான், அ.தி.மு.க. கூட்டணி தேவையா என்பது குறித்து தமிழக பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளிடம் கட்சியின் டெல்லித் தலைமை கருத்துக் கேட்டிருக்கிறது.

இது தொடர்பாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, தமிழக பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 15 பேருக்கு கடிதம் எழுதி இருப்பதாகக் கூறப்படுகிறது. அக்கடிதத்தில், “தமிழக அரசியல் கள நிலவரம் எப்படி உள்ளது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டுமா அல்லது தனித்தே போட்டியிடலமா? மற்ற கட்சிகளின் நிலை என்ன என்பது குறித்து கருத்துக் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி உள்ளிட்டோர் தங்களது கருத்தை எழுதி டெல்லித் தலைமைக்கு தபாலில் அனுப்பி இருக்கிறார்கள்.

இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, “பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். நாங்களும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்றுதான் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதிருந்து கூறி வருகிறோம்.

இந்த சூழலில்தான், தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளுக்கு, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடிதம் எழுதி இருக்கிறார். அக்கடிதத்தில், தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஓட்டு சதவீதம் எவ்வளவு உயர்ந்திருக்கும் என்று கணிக்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடலாமா?

சிறிய கட்சிகளின் நிலை என்ன? அ.தி.மு.க.வுடனான உறவு எப்படி உள்ளது? அக்கட்சியோடு கூட்டணி அமைப்பது சாத்தியமா? என்பது உள்ளிட்ட 12 கேள்விகள் இடம்பெற்றிருக்கின்றன. இக்கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கட்சி மேலிடம் கேட்டிருக்கிறது. நிர்வாகிகளும் தங்களின் கருத்தை எழுதி நட்டாவுக்கு அனுப்பி விட்டனர். இதனடிப்படையில், கூட்டணி தொடர்பாக இறுதி முடிவெடுக்க பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்திருக்கிறது” என்றனர்.

Tags: bjpJ.P.NaddaADMK Alliance
ShareTweetSendShare
Previous Post

 இரண்டாவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்!

Next Post

ஓபன் டென்னிஸ் போட்டி : இந்திய வீரர் வெற்றி!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies