சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இரயிலின் இன்ஜின் தடம் புரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சேத்துப்பட்டில் இரயில் பணிமனை உள்ளது. இங்குள்ள பயணிகள் இரயில் பெட்டிகளை இன்ஜின் மூலம் இழுத்து சென்று பிளாட்பாரத்தில் நிலை நிறுத்துவது வழக்கம்.
அந்த வகையில், இன்று சேத்துப்பட்டில் இரயில் பணிமனையில் இருந்து இன்ஜின் இழுத்து சென்றது. அப்போது, சென்னை எழும்பூர் இரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
தடம் புரண்ட இரயில் இன்ஜினை சீரமைக்கும் பணியை ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய 3 சக்கரங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால், பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.