நடிகர் விஜய் படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடும் போது க்யூட்டாக டென்ஷனான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு பொங்கல் அன்று தளபதி விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் திரைக்கு வந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் 2022 ஆம் ஆண்டி இரண்டாம் பாதியில் நடைபெற்றது.
இந்த படத்தின் ஷூட்டிங் போது தளபதி விஜய் படக்குழுவினருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை அந்த படத்தின் பாடலாசிரியர் விவேக் அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில், விவேக் பந்தை வேகமாக அடிக்க அது சிக்சராக போய் விழுகின்றது. ஆனால் எதிர் அணியினர் அது 4 தான் என்று கூற, பக்கத்தில் நின்ற தளபதி விஜய் அது சிக்ஸ் தான் என்று சண்டைக்கு செல்கின்றார்.
Thalapathy @actorvijay – cute fight for our team is Wholesome 🤣😍❤️
‘Sixxxu.. Sixu Sixu’ @iamRashmika @iYogiBabu @ActorShaam @directorvamshi pic.twitter.com/1SzjyP7LMK
— Vivek (@Lyricist_Vivek) January 9, 2024
மேலும் நீ அடித்தால் மட்டும் தான் அது சிக்சா என்று எதிர் அணியரோடு சண்டைபோடும் விஜய், இறுதியில் விவேக்கை பாராட்டுகிறார். இந்த க்யூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.