18 மாநிலங்களில் 220 மாவட்டங்களில் 22,544 கிராமங்களில் வசித்து வரும் 75 மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகங்களை மத்திய அரசு கண்டறிந்து ரூபாய். 24,000 கோடி ரூபாய் மதிப்பில் அம் மக்களின் வாழ்வாதாரம் செழிக்க வீடு. மின்சாரம், குடிநீர், சுகாதார காப்பீடடு, கல்வி, சாலை என மத்திய அரசு பல்வேறு திட்டங்களின் மூலம் திட்டமிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டம், பந்தலூர், கையுண்ணி PRF காலனியில் மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூக மக்களின் இல்லங்களில் மின்சார இணைப்பு இன்று வழங்கப்பட்டது. முதல் முறையாக அவர்களின் வீடுகளில் வெளிச்சம் வந்துள்ளது. பிரதமர் மோடியின் சீரிய திட்டம் இது. இந்த நிகழ்வு அப்பகுதியில் உள்ள மக்களை பெரு மகிழ்ச்சி அடையவைத்துள்ளது.
https://twitter.com/narayanantbjp/status/1745021496626659696
இதனை, தமிழக பாஜக துணைத் தலைவர் நாரணயனன் திருப்பதி தமது X பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.