அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய தினம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அமைந்திருக்கும் அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தேசத்தின் நாளைய தூண்களான கல்லூரி மாணவ சகோதரிகள் மத்தியில், ‘பாரதத்தின் வளர்ச்சியில் இளம் மகளிரின் பங்கு’… pic.twitter.com/CdiQydBx9M
— K.Annamalai (@annamalai_k) January 10, 2024
இன்றைய தினம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அமைந்திருக்கும் அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தேசத்தின் நாளைய தூண்களான கல்லூரி மாணவ சகோதரிகள் மத்தியில், ‘பாரதத்தின் வளர்ச்சியில் இளம் மகளிரின் பங்கு’ என்ற பொருத்தமான தலைப்பில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
கடந்த பத்து ஆண்டுகளில், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பெரும்பான்மையான வீடுகள் குடும்பத் தலைவிகள் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டிருப்பது, புகையற்ற சமையலுக்காக இலவச சமையல் எரிவாயு இணைப்பு, முத்ரா கடனுதவி மூலம் பெண் தொழில் முனைவோருக்கு முன்னுரிமை கொடுத்தது உள்ளிட்ட பெண்கள் முன்னேற்றத்திற்காக நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துக் கூறி, தேசத்தை வலிமையாகக் கட்டமைப்பதில் பெண்களின் பங்கை நமது பிரதமர் உணர்ந்திருப்பதையும் பகிர்ந்து கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.